--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு..!

6

மிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை (திங்கட்கிழமை – 29.06.2026) காலை 09:00 மணி முதல் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

 

 

பின்னர் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

திண்டுக்கல்: வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை பகுதிகள், பள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கேத்தையன்கோட்டை, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, பூசாரிப்பட்டி, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கொம்பை, நெட்டோவாம்பட்டி மற்றும் குஜிலியம்பாறை டவுன் பகுதிகள் (சின்னாலுப்பை துணை மின் நிலையம்). திண்டுக்கல் கிழக்கு பகுதிகள்: செங்குறிச்சி, ராஜாகாபட்டி, திருமலைக்கேணி மற்றும் காம்பிலியம்பட்டி.

 

 

தேனி: கம்பம் மற்றும் கூடலூர் பகுதிகள், கம்பம் நகரம், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன் கோவில், ஊத்துக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகள். கண்டமனூர் பகுதிகள்: தப்புக்குண்டு, வி.சி.புரம் (V.C.Puram), சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும்.

 

கோவை: பதுவாம்பள்ளி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பதுவாம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம் மற்றும் சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகள். தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும். அரியலூர்: இலந்தைக்கூடம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அண்ணிமங்கலம் மற்றும் வெங்கனூர் ஆகிய கிராமப் பகுதிகள் ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon