மின்தடையை சமாளிக்க பொறியாளர்களுக்கு நள்ளிரவு வரை பணி – மின்சாரத்துறை விளக்கம்
அதிக சுமை காரணமாக மின்மாற்றிகள் பழுதடைவதால் மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சமாளிக்க துணை மின்நிலையங்களில் பொறியாளர்கள், களப்பணியாளர்களுக்கு மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை கட்டாயப்பணி உத்தரவிடப்பட்டுள்ளது.
புகார்களை பெற 3 சிஃப்ட்டிலும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. புதிய மின்மாற்றிகள் பொருத்தவும் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.






