ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டும் – உதயநிதி
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடையணிந்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, பாஜகவால் தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக கூறி, இதனை தமிழக மக்கள் ஒருமித்தமாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் சூழ்நிலையை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் தெரிவித்த அவர், வரும் 23ஆம் தேதி இந்த முயற்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




