சட்டசபை நிகழ்வுகள் அங்குள்ள எல்.இ.டி., ‘டிவி’க்களில் ஒளிபரப்பு
முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்கள் எவ்வளவு நேரம் பேசுகின்றனர். அவர்களின் தொகுதி, கட்சி உள்ளிட்ட விபரங்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்று இரங்கல் குறிப்புகள் மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்ட போது, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்களின் சுய விபரங்கள், அரசியல் பின்னணி குறித்து, சில வினாடிகள் திரையில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.






