6 குழந்தை கூட பெத்துப்போம் : சீமான்
மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு இந்திய தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் கூறினார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சீமான், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு கொண்டு வர முடியாது என்றார்.
நான் 6 பிள்ளைகளைக் கூட பெற்றுக்கொள்வேன் எனக் கூறிய அவர், இனி இருவருக்கு அறுவரா? என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார்.





