பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 4 பேர் பலி!
சிவகாசி அருகே ஆண்டியாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 6 அறைகள் தரைமட்டமான நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வெடி மருந்து உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.



