திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில் ஸ்ரீ வீரசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த 1ம் தேதி காப்பு கட்டுகளுடன் துவங்கி உள்ளது. இன்று பொதுமக்கள் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட லட்சார்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வந்தது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர் கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




