--- --:--:-- --

மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!

12

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மல்லிகுடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சின்னதம்பி (60) இவர் தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் இன்று கடுக்கலூர் கிராமத்தில் ஒரு வீட்டில் டைல்ஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

அதனை தொடர்ந்து அவரது உடல் பினக்கூறு ஆய்வு செய்வதற்காக திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மகள் உள்ள நிலையில் இவரது உறவினர்கள் கதறும் காட்சி காண்போரை கலங்கச் செய்தது. சம்பவம் குறித்து திருப்பாலைகுடி காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon