அமெரிக்காவில் தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக காவலர்..!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமை காவலர் தேவரராஜ், கோலூன்றி தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமாவில் ‘தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டி’ நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்ற சேலத்தைச் சேர்ந்த தலைமை காவலர் தேவரராஜ், தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் கோலூன்றி தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




