ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான் காலமானார்!
ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான பீட்டர் ரூஃபாய் (61) உடல்நலக் குறைவால் காலமானார். உலகின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக நைஜீரியா அணியை உருவாக்கிய இவர், அதன் கேப்டனாகவும், சிறந்த கோல் கீப்பராகவும் செயல்பட்டார்.
17 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய இவர், ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வெல்ல காரணமாக இருந்தார். இவர் தலைமையில் தான், அந்த அணி முதன் முதலாக உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





