உத்திரபிரதேச சட்டப் பேரவைக்குள் பான் மசாலா எச்சில் துப்பிய எம்.எல்.ஏ..!
உத்திர பிரதேச சட்டப்பேரவைக்குள் பான் மசாலா எச்சிலைத் துப்பியை எம்எல்ஏவை பேரவை தலைவர் கடிந்து கொண்டார். உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
அம்மாநில நிதி அமைச்சர் சுரேஷ்குமார் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் உத்தரபிரதேச சட்டப்பேரவைக்குள் பான் மசாலா சாப்பிட்ட உறுப்பினர் ஒருவர் அங்கே எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பேரவை தலைவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட பேரவை தலைவர் இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக உறுப்பினர்களிடம் இதைப் பற்றி பேசினார். பேரவைக்குள் எச்சில் துப்பிய எம்எல்ஏ யார் என்று வீடியோ மூலம் தெரிய வந்தது.
ஆனால் அனைவரின் முன்னிலையில் அவரின் பெயரை சொல்ல விரும்பாத சபாநாயகர் இது போன்ற செயலில் யாரேனும் ஈடுபடுவதை மற்றவர்கள் கண்டால் அவர்களை தடுக்க வேண்டும் என்றும் அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட உறுப்பினர் ஏதேனும் தனிப்பட்ட முறையில் வந்து ஒப்புக்கொண்டால் நல்லது. இல்லை எனில் அவரை நானே அழைப்பேன் என தெரிவித்து கடிந்துக் கொண்டார்.






