மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம்..!
தாம்பரத்திற்கு இன்று 9 மணி நேரம் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை புறநகர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட 9 மணி நேரத்தில் பல்லாவரம் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதேபோன்று செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.
மாலை 4 மணிக்கு பின் வழக்கமான கால அட்டவணையில் அனைத்து மின்சார ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.தாம்பரத்தில் புதிய நடை மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் ரயில்சேவையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக்கம் இயக்குகிறது. அதன்படி பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளும், கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




