விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக: அண்ணாமலை
டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதன்காரணமாக, இந்த ஆண்டு சம்பா பயிர்கள் சுமார் 2,000 ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.






