--- --:--:-- --

ஒரு நம்பர் மாறியதால் மாதம்தோறும் ஆணுக்கு வரும் ரூ.1,000.. மகளிர் உரிமை தொகை..!

8

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் பதிவு செய்துள்ளார்.

 

ஆனால் அரசு வங்கி கணக்கின் கடைசி எண் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் கிருஷ்ணன் என்பவரது வங்கி கணக்கெடுக்க கடந்த 14 மாதங்களாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வரவாகியுள்ளது.

 

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் வேடசந்தூர் வட்டாட்சியர் பழனி கோட்டாட்சியர் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற முருகேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon