--- --:--:-- --

குமரியில் மாயமான இளைஞர் கேரளாவில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் மீட்பு..!

8

குமரி மாவட்டத்தில் மாயமான இளைஞர் கேரளாவில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ராஜகுமாரன் என்பவரின் இளைய மகன் விஷ்ணு கடந்த 8ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை வேலைக்கு சென்ற இடத்தில் விசாரித்த பொழுது பணிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். பல இடங்களில் தேடி மகன் கிடைக்காததால் போலீசில் ராஜகுமாரி புகார் அளித்தார்.

 

விசாரணை மேற்கொண்ட பொழுது கேரள மாநிலம் திருவனந்தபுரம் சண்முக பகுதியில் அடையாளம் தெரியாத நபர் மொட்டை தலையுடன் சுற்றித் திரிவதாக போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது. விசாரணையில் வேலைக்கு செல்லாமல் திருவனந்தபுரம் சென்று சுற்றியதாகவும் பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மொட்டை அடித்ததற்கான காரணம் குறித்து பதில் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். இதையடுத்து அவரது தாயாரை அழைத்து பத்திரமாக பார்த்துக் கொள்ள அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon