உயரழுத்த மின்கம்பியில் தவறி விழுந்த நபர்..!
கிருஷ்ணகிரியில் வீட்டின் மாடியில் உயரஅழுத்த மின் கம்பியில் தவறி விழுந்த நபர் உயிருக்கு போராடிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மங்கலம் பகுதியில் கடை நடத்தி வரும் பிரேம்ராஜ் என்பவர் அந்த பகுதியில் உள்ள வீட்டில் நேற்று புதிதாக குடியேறியுள்ளார்.
அப்பொழுது வீட்டின் மாடியில் உள்ள குடிநீர் குழாயை சரிசெய்ய முயன்ற பொழுது பிரேம் ராஜ் கால் தவறி உயிரிழந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்து அவரது உடலில் தீப்பற்றியது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 60% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் விபத்தில் நிகழும் வகையில் உள்ள உயரழுத்த மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






