கொட்டி தீர்க்க போகும் கனமழை..வானிலை மையம் எச்சரிக்கை..!
வங்க கடலில் பகுதியில் அடுத்த 5 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் முதல் நாள் அன்று இறுதியில் தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 7ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





