--- --:--:-- --

சந்தன மரத்தை வெட்டி கடத்திய 3 பேர் கைது..!

4

கோவை பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 3 பேரை கைது செய்தனர். கடுக்காய் பகுதியில் வனத்துறையினர் களாய்வு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது மூன்று நபர்கள் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்ததைக் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

 

இதில் அவர்கள் கள்ளக்குறிச்சி பகுதியில் சேர்ந்த அண்ணாமலை, அசோக், கணேசன் என்பதும் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் கடத்தி வந்த மூன்று சந்தன மரங்களை பறிமுதல் செய்ததோடு மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon