--- --:--:-- --

இஸ்ரேல் ராணுவ படை பிரிவின் தளபதி உயிரிழப்பு..!

7

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ படை பிரிவின் தளபதி உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காசாவின் ஜபாலியா பகுதியில் ஹமாஸ் அமைப்பினருடான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் 41 வது படை பிரிவின் தளபதி கர்ணன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் மேலும் ஒரு அதிகாரி படுகாயம் அடைந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon