--- --:--:-- --

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி தெரிவிக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

2

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை தமிழக அரசு கொடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் நாசர் திறந்து வைத்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலப் பணிகளை தமிழக அரசு செய்து கொடுத்து வருவதாகவும் அவர்களுக்கான பணி நிரந்தரம் தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார் என கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon