மது ஒழிப்பு மாநாடு நாடகம்: எல்.முருகன்
விசிகவின் மதுஒழிப்பு மாநாடு நாடகம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேட்டியளித்த அவர், மது ஒழிப்பு மாநாடு நாடகத்தை முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் இணைந்து அரங்கேற்றியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும், தொடர் கொலைகள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.





