மேம்பாலத்தில் நடந்த விபத்து.. சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்..!
திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர் சஞ்சீவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக கொசுத்தலை ஆற்றின் மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






