--- --:--:-- --

வேதனையில் தவிக்கும் வயநாடு மக்கள்.. நிவாரண நிதி வழங்கிய விக்ரம்!

14

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். 400க்கும் மேற்பட்ட வீடுகளில் இப்போது வெறும் 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் விக்ரம், கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Right Menu Icon