சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து..!
சீர்காழி அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். கோவையில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது சீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை அருகே திருப்பத்தில் வளைந்த பொழுது சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் ரவி என்பவர் காயமடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணம் செய்து 10ம் மேற்பட்ட பயணிகள் காயம் இன்றி தப்பினர். இது குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





