--- --:--:-- --

2வது புத்தகத் திருவிழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

3

விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சிக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி தொடரில் இரண்டாவது புத்தக திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

 

10 நாட்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்திருவிழாவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

 

போட்டித் தேர்வுகளுக்காக விற்பனை செய்யப்படுவதால் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி கேட்டுக்கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon