சபரிமலை சென்ற தமிழ் பக்தருக்கு 20 கோடி ரூபாய் லாட்டரி பரிசு..!
புதுச்சேரியை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவருக்கு கேரள லாட்டரியில் 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரளா அரசு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததில் முதல் பரிசுக்கான தொகை 20 கோடி ரூபாயாகும்.
புதுச்சேரியை சேர்ந்த 33 தொழிலதிபர் ஒருவர் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சபரிமலைக்கு சென்றார். பின்னர் திருவனந்தபுரம் பத்மநாபபுரம் சுவாமி கோயிலில் வழிபாடு நடத்தி கோவில் அருகே லாட்டரி டிக்கெட் விற்பனையாளரிடம் இருந்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
தற்பொழுது அந்த லாட்டரி சீட்டுக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளது. இதை அறிந்த புதுச்சேரி நபர் நேரடியாக கேரளா அரசு லாட்டரி நிறுவனத்தை அணுகி தனது லாட்டரி டிக்கெட் சமர்ப்பித்தவுடன் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன்40 சதவீதம் போக அவருக்கு 12 கோடி ரூபாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





