அலப்பறை கூட்டிய டிடிஎஃப் வாசன்.. விரட்டிவிட்ட தேமுதிக நிர்வாகிகள் ..!
யூடியூப் பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். பார்க்க பாவமாக இருந்தாலும் பைக் ரைடில் சாகசம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். TTF வாசன் மஞ்சள் வீரன் படத்தில் நடித்த பிறகு சினிமாவில் கலக்குவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தால், நடுரோட்டில் வீலிங்க் அடித்து படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் TTF வாசன், விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது நினைவிடத்துக்கு சென்றுள்ளார். அப்போது அஞ்சலி செலுத்திவிட்டு, TTF தனது ரசிகர்களுடன் செல்ஃபீ எடுத்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த தேமுதிக நிர்வாகிகள் போட்டோ எடுக்குற இடமா இது.. யாரா இருந்தாலும் அடிச்சிடுவ பாத்துக்கோங்க என்று திட்டியுள்ளார். உடனே ஒண்ணும் தெரியாதது போல் ஷீ-வை மாட்டிக்கொண்டு சென்ற TTF வாசன். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




