சிறப்பு ரயிலில் சென்னை வந்த முதியவருக்கு திடீர் மாரடைப்பு..!
நெல்லையிலிருந்து சிறப்பு ரயிலில் சென்னை வரும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு முதியவருக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூரில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் மழை வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில் பயணம் செய்தவர்கள் மீட்கப்பட்டு சிறப்பு ரயில்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ரயில்வே பயணம் செய்த முத்தையா என்ற முதியவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மருத்துவ குழுவினருடன் அங்கு சென்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளித்து அவர் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





