அமெரிக்கா தேர்தலில் திடீர் திருப்பம்.. இந்திய வம்சாவளி வேட்பாளர் விலகுகிறாரா..?
ட்ரம்ப் போட்டியில் இல்லை என்றால் நான் விலகுவேன் என விவேக் ராமசாமி அதிரடியாக கூறியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த யார் போட்டியிடப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள விவேக் ராமசாமி கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் ட்ரம்புக்கு எதிரான தீர்ப்பை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன் என்றும் இது அமெரிக்காவின் மோசமான விளைவு ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாததால் தான் நானும் போட்டியில் இருந்து விலகுவேன் எனவும் குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





