வெள்ளத்தில் சிக்கிய ரயில்.. ஸ்டேஷனில் மயங்கி விழுந்த சிறுவன்..!
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் புறப்படுவதற்காக காத்திருந்தபொழுது சிறுவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் நின்ற ரயில் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் கோவில்பட்டி அருகே உள்ள வாஞ்சி மணியாச்சி பகுதியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறுவன் ஒருவர் ரயிலில் மயங்கி விழுந்தான். அப்பொழுது சிறுவனுக்கு அங்கிருந்த மருத்துவமனையில் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





