தாங்க முடியாத மாதவிடாய் வலி.. மாத்திரை சாப்பிட்ட சிறுமி பலி..!
சுய மருத்துவம் செய்து கொண்ட சிறுமிக்கு மூளையில் ரத்த கட்டி உருவாகி பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து கிழக்கு மட்லான்ஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமிக்கு மாதவிடாய் கால வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் அவரது தோழிகள் வயிறு வலியை குறைக்க கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ள ஆலோசனை கூறியுள்ளனர். இதன் பின்னர் தொடர் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அந்த கட்டியை அகற்ற அவருக்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் துதிஷ்டவசமாக மரணம் அடைந்து விட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





