பெட்ரோல் மற்றும் மெழுகுவர்த்தி பாட்டில் வெடித்து 16 வயது இளம்பெண் பரிதாப பலி..!
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. 16 வயதானவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை கரண்ட் கட்டான சமயத்தில் தனது சகோதரர் வாங்கி வந்த பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் ஊற்ற உதவியுள்ளார்.
அப்பொழுது மெழுகுவர்த்தியை ஏந்தி பெட்ரோல் பக்கம் நின்றுள்ளார். இந்த சமயத்தில் பாட்டிலில் இருந்த பெட்ரோல் வெடித்து சிதறியுள்ளது. இதில் 30 சதவீதம் தீக்காயம் அடைந்த சவுந்தர்யா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானார்.
அதே வேலையில் போலீஸ் விசாரணையில் வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. சௌந்தர்யாவின் தந்தை லட்சுமணன் சட்டத்துக்கு புறம்பாக தான் நடத்தி வந்த மளிகை கடையில் பெட்ரோல் விற்றதாக கூறப்படுகிறது.
கரண்ட் கட்டான சமயத்தில் பெட்ரோல் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு மெழுகுவர்த்தி உதவியுடன் சௌந்தர்யா பாட்டிலில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். அப்போது திடீரென கரண்ட் வந்ததால் மெழுகுவர்த்தியை பாட்டில் மீது போட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





