பிஎம் கிசான் திட்டம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ.6000 வழங்கும் இந்த திட்டத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது மத்திய அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் தலா ரூ.2000 விகிதம் 3 தவனைகளாக பயணாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
அதன்படி, இதுவரை 15 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் 16வது தவணை தொகையும் வரவு வைக்கபடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்திரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 8.12 கோடி விவசாயிகள் பயனடைந்து வருவதாக சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் ரஜினி படேல், 2019 ஒப்பிட்டு பார்க்கையில் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கைலாஷ், இந்த திட்டத்தில் மொத்தம் 11 கோடி விவசாயிகள் இருந்தததாகவும் அவர்களுக்கான முழு தொகையும் செலுத்தப்பட்டதால் தற்போது பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விளக்கம் அளித்தார்.
மேலும் மாநிலங்கள் வழங்கிய பட்டியலின் அடிப்படையிலே பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி வழங்கப்படுவதாகவும், அவற்றை சோதனை செய்ததில் அதில் பெரும்பாலானோர் திட்டத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




