--- --:--:-- --

மருத்துவமனையில் அடுத்தடுத்து 10 குழந்தைகள் உயிரிழப்பு.. காரணம் என்ன..?

10

மேற்குவங்க மாநிலம் அரசு மருத்துவமனையில் 10 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தக் குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முச்சிதாபாத் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

 

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மருத்துவர் அமிர்தா ஜாங்கி போர் துணை பிரிவு மருத்துவமனையில் கட்டிட பணி மேற்கொள்ளப்படுவதால் அங்கிருந்து தொழிலாளர்கள் முசிதாபாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

அழைத்துவரப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எடை குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். குழந்தைகளை மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு 5 மணி நேரத்திற்கு மேலானதால் அவர்களை காப்பாற்றுவது கடினமாக இருந்தது என்றும் பேராசிரியை தெரிவித்துள்ளார்,

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon