--- --:--:-- --

வங்கிகள் இணைப்பை கண்டித்து கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!!

12

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து கோவையில் கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள உள்ள கனரா வங்கியின் முன்னோடி கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்படாடது.

வங்கிகள் இணைப்பால் வங்கி வாடிக்கையாளர்கள் சேவை கடுமையாக பாதிக்கப்படும் எனவும், வங்கிகளை இணைப்பதால் வங்கி கிளைகள் மூடப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.மேலும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது.இது போன்ற சூழ்நிலையில் வங்கிகள் இணைப்பு தேவையற்றது எனவும், பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வங்கிகள் இணைப்பை திரும்ப பெற வேண்டும் எனவும், அக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon