தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்.. மறைக்கும் அரசு.. முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டு..!
தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற போதிய படுக்கைகள் இல்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அரசு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.





