--- --:--:-- --

சட்டை வாங்குவது போல் நடித்து சட்டையை திருடிய இளைஞர்கள்..!

8

தேவகோட்டையில் துணிக்கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் சட்டையை லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கார்த்திக் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார்.

 

இவரது கடைக்கு கடந்து 24 ஆம் தேதி மூன்று இளைஞர்கள் துணி வாங்க வந்துள்ளனர். ஒரு சட்டையை எடுத்து லாவகமாக தனது வேஷ்டிக்குள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

 

சட்டைகளின் எண்ணிக்கை குறைவதை அறிந்த கடை உரிமையாளர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்துள்ளார். அதில் மூன்று இளைஞர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து கார்த்தி அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon