இஸ்ரேல் பெண்ணுக்கு நேர்ந்த சோதனை..!
படுகாயம் அடைந்த இஸ்ரேல் பெண்ணுக்கு முதலுதவி அளிக்கும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 21 வயது பெண் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதும் தன்னுடைய நிலை குறித்து அவர் கூறுவதும் இடம்பெற்றுள்ளது.
காசாவில் உள்ள மருத்துவமனையில் தனக்கு 3 மணி நேரம் முதலுதவி செய்ததாகவும் ஹமாஸ் அமைப்பினர் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பெற்றோரிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.





