--- --:--:-- --

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா : திமுக எம்.பிக்களுக்கு கட்சி தலைமை முக்கிய உத்தரவு!

6

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது, நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அறிவுறுத்துதல், விஸ்வகர்மா யோஜனா திட்ட கைவிடுதல் ஆகியவற்றை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தவும், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்னையை எழுப்பவும் திமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

மேலும், பாஜக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவும், இரு அவைகளிலும் எதிர்த்து வாக்களிக்கவும் திமுக எம்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon