தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் மதுரையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை மாவட்டத்தில் பெய்த வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று மாலை கன மழை பெய்தது.
மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, அழகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





