--- --:--:-- --

ஓடும் ரயிலில் அதிக அளவில் செல்போன்கள் திருட்டு..!

7

ஓடும் ரயிலில் நடைபெறும் திருட்டு சம்பவங்களில் செல்போன் திருட்டு முதலிடத்தில் உள்ளதாக திருச்சி ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

ரயில் பயணிகளின் உடைமைகள் மெட்டல், டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன. ரயில்களில் ஏற்றப்படும் பார்சல்கள் மட்டும் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

திருச்சூர் ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஓடும் ரயிலில் நடைபெறும் திருட்டு சம்பவங்களில் செல்போன் திருட்டு அதிக அளவு நடைபெறுவதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon