மதுரவாயல் ஹோட்டல் இட்லியில் கரப்பான் பூச்சி.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!
சென்னை மதுரவாயலில் வாடிக்கையாளருக்கு பார்சலில் வழங்கப்பட்ட இட்லியில் கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயிலை சேர்ந்த மனோஜ் என்பவர் மாநகரத்தில் உள்ள பிரபல உணவகத்திற்கு சென்று 160 ரூபாய் கொடுத்து எட்டு இட்லியை பார்சலாக வாங்கி சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது ஒரு இட்லியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தொலைபேசி மூலம் ஹோட்டலில் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து கரப்பான் பூச்சி இருந்த இட்லியுடன் உணவகத்திற்கு சென்ற மனோஜ் அதை பணியாளர்களிடம் காண்பித்துள்ளார். அப்பொழுது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே உணவகத்தில் தான் வாடிக்கையாளருக்கு பரிமாறிய பிரியாணியில் கோழியின் இறகு இருந்தது. அதேபோல கடந்த அக்டோபர் மாதமும் உணவில் பூரானும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





