தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து பஸ் மீது கார் மோதி கோர விபத்து..!
திருவெண்ணைநல்லூர் அருகே சித்தாரங்கோடு கிராமத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இரண்டு பேர் பலியாகி உள்ளனர். டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் வந்த பேருந்து மீது மோதியது.





