--- --:--:-- --

எம்பி பதவியை இழந்ததால் ராகுல் காந்திக்கு வரும் அடுத்தடுத்த சோதனை..!

2

ரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கப்பட்டிருப்பதுடன் மேலும் பல்வேறு சோதனைகளுக்கும் ஆளாகியுள்ளார். தண்டனை மீதான தடை உத்தரவு பெறாவிடில் எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் மக்களவை அல்லது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

எம்பி பதவி இழந்ததால் அவருடைய வயநாடு தொகுதி காலியாவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடைபெறலாம். ஆயினும் மேல்முறையீடு செய்வதற்கு ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் இருப்பதால் அதுவரை தேர்தலில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறப்படுகிறது.

 

மேலும் தற்போது அவர் குடியிருக்கும் அரசு நிலத்தை காலி செய்யவும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Right Menu Icon