--- --:--:-- --

சீனாவில் டிரைவர் இல்லாமல் தானியியங்கி கார் அறிமுகம்..!

4

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி ரோபோ டேக்சிகளின் சேவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஊஹான் மாகாணத்தில் முதற்கட்ட பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்ட தானியங்கி ரோபோ டாக்ஸிகள் இந்தாண்டு ஜனவரி வரையில் சுமார் 2 மில்லியன் சவாரிகளை கடந்துள்ளதாக சீனாவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அப்பல்லோ என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் டாக்ஸிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தானியங்கி டாக்ஸிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மேலும் சில நகரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon