பிறந்தநாளுக்கு மிட்டாய் கொடுக்காததால் ஏற்பட்ட கலவரம்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திறக்கப்பட்டதில் பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் காயமடைந்தனர். 16 வயது மாணவர்கள் இருவர் ஆலங்குடியில் உள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர்.
அவர்கள் நாள்தோறும் அரசு பேருந்தில் செல்வது வழக்கம். இந்த நிலையில் மற்றொரு மாணவரின் பிறந்தநாளுக்காக பேருந்தில் பயணி அனைவருக்கும் மிட்டாய் கொடுப்பது தொடர்பாக தெற்குப்பட்டியை சேர்ந்த மாணவர்களுக்கும் ஆகாஷ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயம் அடைந்தனர். மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





