--- --:--:-- --

இந்தியாவையும் உளவு பார்த்ததா சீன பலூன்கள்..?

3

இந்தியா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளின் ராணுவ ரகசியங்கள் குறித்தும் சீன பலூன்கள் உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் பிரம்மாண்ட பலூன்கள் அமெரிக்கா மீது பறந்த நிலையில் அவற்றை அந்நாட்டு படைகள் சுட்டு வீழ்த்தினார்.

 

சீனா உளவு பார்த்ததாக அமெரிக்காது கூறுவதை சீனா மறுத்துள்ளது. பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா – சீனா உறவு மேலும் விரிசல் அடைந்துள்ளது.

 

இந்த நிலையில் இந்தியா, தைவான், ஜப்பான், பிரிட்டன் நாடுகளின் ராணுவ ரகசியங்களையும் சீன பலூன்கள் உளவு பார்த்ததாக பாதுகாப்புத்துறை உளவுத்துறை அளிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

சீன ராணுவம் அனுப்பிய பலூன்கள் ஐந்து கண்டங்கள் மீதும் பறந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon