--- --:--:-- --

நவ. 8ம் தேதி நிகழும் சந்திர கிரகணம்..!

5

நவம்பர் எட்டாம் தேதி நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு வடிவ நிலைகளை காண இயலாது என தெரிவித்துள்ளது.

 

இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் 3.46 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா, தௌஹாத்தி, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் 18 முதல் 50 நிமிடங்கள் வரை கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை நாம் மாலை 5.39 மணி முதல் 40 நிமிடங்கள் சந்திர கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon