மலையாள நடிகையை அலுவலகத்தில் வைத்து பூட்டிய சம்பவம்..!
இளம் மலையாள நடிகையான அன்ன ராஜனை தனியார் ஊழியர் ஒருவர் அலுவலகத்தில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்தவர் இவர். புதிய சிம் வாங்குவதற்காக தனியார் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்பொழுது அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் புதிய சிம் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த ஊழியர் அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது .இதையடுத்து அவர் புகார் அளித்துள்ளார்.






