பட்டாசை ரயிலில் ஏற்றிக்கொண்டு சென்றால் அபராதம்..!
எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள் மற்றும் பொருட்களை ரயிலில் எடுத்து செல்ல வேண்டாம் என பயணிகளை தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வோர் பார்சல் மூலம் பட்டாசுகளை கொண்டு செல்வதை தடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
அறிவுறுத்தலையும் மீறி பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறை தண்டனை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசுகளால் உயிரிழப்போ அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட பயணியே பொறுப்பேற்க வேண்டும் என தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளது.





